கர்ப்பமாக உள்ளேன் என ஏமாற்றிய பெண்! பிரசவத்தில் பிறந்த குழந்தையை காட்டியது எப்படி! அதிர்ச்சி தரும் பின்னணி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கர்ப்பமாக இருப்பதாக ஏமாற்றி சடலமாக கிடந்த தோழியின் குழந்தையை தனது குழந்தை என பொய் சொன்ன பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்ஸாஸை சேர்ந்தவர் Magen Fieramusca (33). இவரும் Heidi Broussard என்ற பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளாக தோழிகளாக உள்ளனர்.

இந்நிலையில் Heidi Broussard கடந்தாண்டு கர்ப்பமானார், அதே சமயத்தில் தானும் கர்ப்பமாகியுள்ளதாக Magen Fieramusca கூறினார்.

இந்த சூழலில் கடந்தாண்டு இறுதியில் Heidi Broussard-வுக்கு குழந்தை பிறந்தது.

பின்னர் சில நாட்களில் அவர் மாயமானார், இதனிடையில் Magen Fieramusca பிரிந்து வாழ்ந்த தனது கணவரிடம் வந்து தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும் இது தான் எனக்கு பிறந்த குழந்தை எனவும் கூறி ஒரு குழந்தையை காட்டினார்.

Austin Police Department

அப்போது காணாமல் போன Heidi Broussard மற்றும் அவர் குழந்தையின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டனர்.

அந்த குழந்தையின் முகமும், தனது குழந்தை முகமும் ஒரே மாதிரி இருப்பதாக Magen Fieramusca-ன் கணவருக்கு சந்தேகம் வந்ததையடுத்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

பொலிசார் Magen Fieramusca-விடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது Magen Fieramusca கர்ப்பமானதாக ஏமாற்றி நாடகமாடியுள்ளார், மேலும் அவரின் காரில் Heidi Broussard சடலம் இருந்தது, அதன் அருகில் அவர் குழந்தை இருந்த நிலையில் அதை திருடி கொண்டு போய் தனது குழந்தை என கூறியது தெரியவந்துள்ளது.

Austin Police Department

ஆனால் Heidi Broussard-வை Magen Fieramusca தான் கொலை செய்தாரா என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் கொலை வழக்கும் அவர் மீது பதியப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 3ஆம் திகதி Magen Fieramusca நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இந்த வழக்கில் உள்ள மர்மங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Austin Police Department

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்