வெளிநாட்டில் உயிரிழந்த இந்திய தம்பதி! பிறந்தநாளில் நடந்த கோர சம்பவம்... பெற்றோரை இழந்த 7 வயது மகள்

Report Print Raju Raju in அமெரிக்கா
240Shares

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் தம்பதி உள்ளிட்ட மூவர் உயிரிழந்தன் காரணமாக அவர்களின் 7 வயது மகள் பெற்றோரை இழந்துள்ளார்.

இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ராஜா கவினி (41). இவர் மனைவி திவ்யா (34). தம்பதிக்கு ரியா (7) என்ற மகள் உள்ளார்.

இவர்கள் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திவ்யாவின் பிறந்தநாள் ஆகும்.

அன்றைய தினம் ராஜா, திவ்யா மற்றும் அவர்களின் நண்பர் பிரேம்நாத் ராமநாதன் ஆகிய மூவரும் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் தங்கள் வீட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

Dallas நகரில் சென்று கொண்டிருந்த காரை திவ்யா ஓட்டினார். அப்போது எதிரில் வந்த கார் வேகமாக திவ்யாவின் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த மூவரும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இது குறித்து இந்தியாவில் உள்ள திவ்யா, ராஜா குடும்பத்தாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முக்கியமாக திவ்யா சென்ற கார் விபத்தில் சிக்கியது என கூறிய உடனேயே அவரின் தாய் மயக்கமடைந்தார். இதனால் அவருக்கு மகள் இறந்த விடயம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

திவ்யாவின் தந்தை கவுதம் கூறுகையில், மகளை நடனப்பள்ளியில் விட்டு மூவரும் காரில் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

திவ்யா தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் தான் தனது பொறியியல் படிப்பை படித்தார், மகள், மருமகனின் இழப்பு எங்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என கூறியுள்ளார்.

இதனிடையில் விபத்தில் இறந்த மூன்றாம் நபர் பிரேம்நாத் ராமநாதன் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் அவர் ராஜாவின் கல்லூரி கால நண்பர் எனவும் தெரியவந்துள்ளது.

மூவரின் சடலங்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வர ஒரு வாரமாவது ஆகும் என தெரிகிறது.

அவர்களின் இறுதிச்சடங்குக்கும், குடும்பத்தாருக்காகவும் ஓன்லைன் மூலம் நிதி வசூலிக்கபட்டு வருகிறது.

திவ்யாவின் கார் மீதி மோதிய இன்னொரு காரில் இருந்த நபர் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்