தனக்கு கொரோனா இருப்பதாக பொய்யாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரால் நேர்ந்த விபரீதம்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்க மாநிலமான ஜார்ஜியாவில் உள்ள ஒரு நபர், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொய்யாகக் கூறி தனது முதலாளியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது என அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

அட்லாண்டாவின் புறநகர்ப் பகுதியான மோரோவைச் சேர்ந்த 34 வயதான சாண்ட்வோன் அன்டோனியோ டேவிஸ், அட்லாண்டா பகுதியில் உள்ள பார்ச்சூன் 500 நிறுவனத்திற்கு செந்தமான தலத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

டேவிஸ் தனக்கு கொரோனா இருப்பதாக தவறான மருத்துவ சான்றிதழை நிறுவனத்திடம் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் நிறுவனம், அத்தலத்தை சுத்தம் செய்வதற்காக மூடியது மற்றும் பணிநிறுத்தத்தின் போது ஊழியர்களுக்கு ஊதியம் அளித்தது.

இதனால் நிறுவனத்திற்கு 1,00,000-க்கும் அதிகமாக செலவானது, மேலும் பல ஊழியர்களின் தேவையற்ற தனிமைப்படுத்தலில் வைக்க கட்டாயப்படுத்தியது என்று அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டேவிஸ் தனது முதலாளிக்கு தேவையற்ற பொருளாதார இழப்பை ஏற்படுத்தினார் மற்றும் அவரது சக ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்று அமெரிக்க வழக்கறிஞர் பியுங் ஜே. பாக் கூறினார்.

கொரோனா உறுதியான சான்றிதழின் நகலைப் பெறுவதற்கான முயற்சியில் நிறுவனம் டேவிஸை பலமுறை தொடர்பு கொண்டதாக எஃப்.பி.ஐ முகவர் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் அதை ஒருபோதும் வழங்கவில்லை. டேவிஸ் தனக்கு கொரோனா இல்லை என்று ஒப்புக் கொண்டதாக அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது டேவிஸ் மீது மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்