கத்தியின்றி இரத்தமின்றி ஒரு கொள்ளை... வங்கி ஊழியரிடம் துண்டுச் சீட்டு கொடுத்து ஒரு வித்தியாசமான கொள்ளை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
229Shares

அமெரிக்காவில் ஆயுதம் எதையும் பயன்படுத்தாமல் நவீன முறையில் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையன் ஒருவனை பொலிசார் தேடிவருகிறார்கள்.

டெக்சாசில் உள்ள வங்கி ஒன்றில் நுழைந்த ஒரு நபர், வங்கி ஊழியர் ஒருவரிடம் சென்று ஒரு காகிதத்தைக் கொடுத்துள்ளார்.

அதில், எனக்கு கொரோனா நிதியுதவியோ, கொடுப்பதாக சொல்லியிருந்த 10,000 கடனோ கிடைக்கவில்லை, வேலையும் போய்விட்டது.

ஆகவே, அமைதியாக வேலையை முடித்துவிடுங்கள். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால், தேவைப்பட்டால் அதையும் செய்வேன்.

சந்தேகத்துக்குரியவகையில் நீங்கள் எதையாவது செய்தால் சுடத்தொடங்கிவிடுவேன். போய் பணத்தை எடுத்துவாருங்கள், மற்றவர்கள் கவனிக்கும் வகையில் எதையும் செய்யவேண்டாம், என்று எழுதப்பட்டிருந்திருக்கிறது.

அந்த வங்கி ஊழியரும் எதுவும் நடக்காததுபோல், அமைதியாக சென்று பணத்தை எடுத்துக்கொண்டு வந்து அந்த நபரிடம் கொடுக்க, பணத்தை வாங்கிக்கொண்டு அமைதியாக சென்றுவிட்டார் அவர்.

அதன் பின்னரே அந்த ஊழியர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார். பொலிசார், CCTV கமெரா காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை தேடிவருகிறார்கள்.

கொள்ளையடித்த நபர் முகம் தெரியாத வகையில் முகத்தில் கர்ச்சீப் கட்டியிருந்ததோடு, தலையை மறைக்கும் விதமாக உடையும் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அவருக்கு கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்