கொரோனா எல்லாம் பொய் என்று நினைத்தேன்: 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் உறுப்பினர் கண்ணீர்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
331Shares

கொரோனா என்பதெல்லாம் பொய் என்று கூறி வந்த ஒருவர் தனது குடும்பத்திலேயே 14 பேருக்கு கொரோனா தொற்றி ஒருவரரை பலிகொடுத்தபின், தன் தவறை எண்ணி கண்ணீர் வடிக்கிறார்.

குழந்தை ஒன்றின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அமெரிக்காவின் டல்லாஸில் ஒரு வீடு ஒன்றில் கூடியுள்ளனர் ஒரு குடும்பத்தினர்.

கொரோனா என்பதெல்லாம் பொய் என கூறிவந்த அந்த குடும்பத்தில் ஒருவரான Tony Green (43)இன் குடும்பத்தினர் அந்த விழாவுக்காக கூடியபோது, ஒருவர் கூட மாஸ்க் அணிந்துகொள்ளவுமில்லை, சமூக இடைவெளியை பின்பற்றவும் இல்லை.

ஆனால், பார்ட்டி முடிந்த சில நாட்களுக்குள், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர், Tony, குழந்தையின் பெற்றோர் உட்பட, நோய்வாய்ப்பட்டனர்.

பிறந்த நாள் கொண்டாடிய குழந்தையின் பாட்டி இறந்துபோனார். இதுவரை கொரோனாவுக்கெதிராக பேசி வந்த Tony, நான்தான் அந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தேன், இன்று நான் அனுபவிக்கும் குற்ற உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கிறார்.

கொரோனா ஒரு பொய் என்று கூறி, மாஸ்க் அணிந்தவர்களையும் சமூக விலகலை பின்பற்றியவர்களையும் கேலி செய்தேன்.

என் குடும்பம் என் பேச்சை நம்பியதால் இன்று சந்தித்துள்ள இழப்பை எண்ணி குற்ற உணர்ச்சியில் அமிழ்ந்துபோயிருக்கிறேன் என்கிறார் Tony.

இனியும் என்னைப்போல் மற்றவர்கள் கொரோனாவை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்பதற்காக நானே முன் வந்து மற்றவர்களை எச்சரிக்கிறேன் என்கிறார் Tony கண்ணீருடன்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்