4 ஆண்டுகளாக என்னிடம் தவறாக நடந்து கொண்டார்! 40 வயது நபரை சிக்க வைத்த பள்ளி மாணவி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் பள்ளி மாணவியிடம் 4 ஆண்டுகளாக தவறாக நடந்து கொண்ட நபரை பொலிசார் கைது செய்த நிலையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

டாஸ் விகாஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வரும் மாணவி பள்ளிக்கூடத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் நபர்களிடம் சென்று ஒரு புகாரை கூறினார்.

அதன்படி Conrad Borjorquez என்ற 40 வயதான நபர் 4 ஆண்டுகளாக தன்னிடம் பலமுறை தவறாக நடந்து கொண்டார் என கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிசில் இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தனர்.

புகாரை தொடர்ந்து Conrad கைது செய்யப்பட்டார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையில் சாட்சியின் மூலம் பொலிசார் Conradன் தொலைபேசி அழைப்பை ரகசியமாக பதிவு செய்தனர்.

அதில் பேசிய அவர், மாணவியை பாலியல் ரீதியாக நான் துன்புறுத்தவில்லை, ஆனால் மாணவி குளிக்கும் போது அவர் மீது கை வைத்தேன் என கூறியிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட Conrad மீது அக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்