அமெரிக்க ஜனாதிபதிக்கு அஞ்சலில் வந்த விஷம் தடவிய கடிதம்: பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
271Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முகவரியுடன் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் உயிர்கொல்லும் விஷம் தடவப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை அதிகாரிகளால் குறித்த கடிதமானது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இச்சம்பவம் அம்பலமானது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் உளவு அமைப்புகள் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

முன்னர் அமெரிக்க அரசியல்வாதிகளை அஞ்சல் மூலம் குறிவைக்க இந்த கொடிய ரைசின் பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பில் டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

வெள்ளை மாளிகைக்கு இது போன்ற நச்சுப் பொருட்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல.

ஏற்கனவே, கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு நச்சுப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது.

கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவரால் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாக அதிகாரிகள் சிலருக்கு கொடிய ரைசின் விஷம் தடவிய அஞ்சல்களை அனுப்பியதும், ஆனால் அதிஷ்டவசமாக எவரும் பாதிப்படையவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்