அமெரிக்க தேர்தலின் வெற்றி தமிழர்கள் உள்ளிட்ட ஆசிய மக்களுக்கு எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்! ஓர் அலசல்

Report Print Karthi in அமெரிக்கா
548Shares

உலக அரசியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் திகதி நடைபெற உள்ள நிலையில் உலக நாடுகள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றன.

இந்நிலையில், இரண்டு மிகப்பெரும் கட்சிகளான குடியரசு கட்சி சார்பிலிருந்து தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சியிலிருந்து ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவுக்கு காலங்காலமாக சிறந்த தொழிலாளர்களை ஏற்றுமதி செய்து வரும் நாடுகளில் இந்தியா மிக முக்கியமானதாகும். ஏறத்தாழ 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவிலிருந்து ஆண்டிற்கு குறிப்பிட்ட அளவில் தொழிலாளர்கள் எச் 1பி விசாக்கள் மூலமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர்.

ஆனால், சமீபத்தில் அந்நாட்டில் மேலெழுந்துள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உள்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கான வேலையானது பெரிதும் கேள்வி குறியாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் ஆசிய மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக திரண்ட மக்கள். Image credit: ALJAZEERA

இதன் காரணமாக அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஜனவரியில் நைஜீரியா, எரிட்ரியா, சூடான், தான்சானியா, கிர்கிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசாக்களை வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.

முன்னதாக ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், வெனிசுலா மற்றும் வட கொரியாவிலிருந்து வரும் பயணிககளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில், முறையான அனுமதியின்றி அமெரிக்காவில் குடியேறியுள்ள 11.3 மில்லியன் புலம் பெயர்ந்தோர் திருப்பி அனுப்பப்படுவார்கள் என வாக்குறுதியில் கூறியிருந்தார்.

பின்னர் வாக்குப்பதிவு நாள் நெருங்கியவுடன், அவரது நிலைப்பாடு சற்று மென்மையாக்கத் தொடங்கியது, பின்னர் தேர்தலுக்குப் பிறகு "குற்றவாளிகள் மற்றும் குற்றப் பதிவுகள், கும்பல் உறுப்பினர்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள்" என இரண்டு முதல் மூன்று மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.

ஒபாமா நிர்வாகத்தின் கீழ் 2012-ம் ஆண்டு உச்சக்கட்டமாக 410,000 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால், 2019-ம் ஆண்டில் டிரம்ப் ஆட்சியில் இந்த எண்ணிக்கையானது 267,000 ஆக இருந்தது.

குடியேற்ற சீர்திருத்தத்திற்கான டிரம்பின் திட்டங்கள் தோல்வியை எதிர்கொண்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. சிறுவயது ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த சுமார் 650,000 இளைஞர்களைப் பாதுகாக்கும் குழந்தை பருவ வருகைக்கான ஒத்திவைக்கப்பட்ட நடவடிக்கையை (டாக்கா) மீட்பதற்கான அவரது நிர்வாகத்தின் முயற்சியை எதிர்த்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

image credit: ALJAZEERA

எதிர்வரும் தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்பானாலும், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் பிடனானாலும் யார் வெற்றி பெற்றாலும், இதர ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறும் மக்களுக்கு பெரிதளவில் எவ்வித பலனும் இல்லை.

ஏனெனில், கறுப்பு, வெள்ளை இன மோதலுக்கு பெயர்போன அமெரிக்காவில் தற்போது வேறு ஒரு நவீன தீண்டாமை வளர்ந்து வருவதற்கான சாயல்கள் தெரியத் தொடங்கியுள்ளன.

சீனாதான் கொரோனா தொற்றை பரப்பியது என பகிரங்கமாக குற்றம் சாடியிருந்து டிரம்ப், அவரைத் தொடர்ந்து சிலர் ஆசியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள நபர்களை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கியுள்ளனர்.

அல்ஜஸீரா என்கிற தனியார் ஊடகம் இது குறித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று சீனர்கள்தான் காரணம் என அமெரிக்கா வாழ் சீனர்களையும், சீனர்கள் என நினைத்து ஜப்பான், தாய்லாந்து, இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தவர்கள், பர்மா போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் மீது அமெரிக்கர்கள் சிலர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதை காண முடிகின்றது.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை காட்டும் வரைபடம்: Image credit MAIL ONLINE

இந்நிலையில் அமெரிக்காவுக்கு நிகராக சீனா பொருளாதாரத்தில் மிக சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்தில் உலக நாணய நிதியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவின் பொருளாதாரம் 2 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று கணித்துள்ளது. ஆனால், மறுபுறம் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரம் தலைக்கீழாக கீழ் நோக்கி பாய்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்