அக்காவுக்கு தனது அறையை கொடுத்துவிட்டு கல்லூரிக்கு சென்று திரும்பிய தங்கை: அறையில் கண்ட மோசமான காட்சி

Report Print Balamanuvelan in அமெரிக்கா
10993Shares

அமெரிக்க பெண் ஒருவர் தான் கல்லூரிக்கு படிக்கச் செல்லும்போது தன் அக்காவிடம் தன் அறையை ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

Massachusetts கல்லூரி ஒன்றில் படித்து முடித்துவிட்ட வீடு திரும்பிய Colleen Cameron, தன் அறையை சென்று பார்த்தபோது, அது குப்பையும் கூளமுமாக கிடந்துள்ளது. சரி, அறையை சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணி சுத்தம் செய்ய தொடங்கினால், வேலை முடிந்தபாடில்லையாம்.

கட்டிலுக்கு கீழே நிறைய போத்தல்கள் கிடப்பதைக் கண்ட Colleen, அது என்ன என்று பார்த்தால், அது சிறுநீர்!

அப்படியே அறை முழுவதும் பல போத்தல்களில் சிறுநீர் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அதாவது, Colleen கல்லூரிக்குச் சென்றபின்னர், அவரது அக்கா அந்த அறையை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

அங்கே அந்த பெண்ணும் அவரது காதலரும் தங்கியிருந்திருக்கிறார்கள். அந்த நபர் ஒரு சோம்பேறி போலும், கழிவறைக்கு செல்ல சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு போத்தல்களில் சிறுநீரை சேகரித்து வைத்திருக்கிறார்.

தான் அறையை சுத்தம் செய்யும் வீடியோவை Colleen சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, அதைப் பார்த்த ஒருவர், அந்த காதலருக்கு கழிவறையை பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மற்றொருவரோ, பேசாமல் அந்த காதலரையே மாற்றிவிடலாம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்