பாம்பனில் ஏற்றப்பட்டுள்ள மூன்றாம் நிலை புயல் எச்சரிக்கை குண்டு

Report Print Ashik in காலநிலை

இலங்கை தென்மேற்கில் இந்திய பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வரையிலான வேகத்தில் காற்று வீச உள்ளதாக சென்னை வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையின் பின் இன்று மாலை பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் நிலை புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி முதல் புயல் எச்சரிக்கையால் ராமேஸ்வரம் பாம்பன் கீழ்க்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீன்பிடி தொழிலாளர்கள் இன்று நான்காவது நாளாகவும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மேலும், பாம்பன் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக மாலையில் பலத்த காற்றும் காலை பொழுதில் இலேசான மழை பெய்துவந்தது.

கடலோரப்பகுதிகளில் வசித்து வரும் மீனவர்களிடையே ஒரு வித பீதி ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களாக மீன் பிடி தொழில் முடங்கியுள்ளதால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், துறைமுகத்தில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை குறித்து அதிகாரிகள் எந்தவொரு அறிவிப்போ, எச்சரிக்கையோ கொடுப்தில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாம்பன், தெற்குவாடி மற்றும் தென்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மற்றும் உப்பு தன்மை, கடலில் ஏற்படும் அலைகளின் தன்மை குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொன்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்