காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை

Report Print Vethu Vethu in காலநிலை
560Shares
560Shares
lankasrimarket.com

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேடமாக மத்திய, சப்ரகமுவ, தெற்கு ஊடாக மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்ய கூடும் என திணைக்களம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களிலும் தற்போது நிலவ கூடிய மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விசேடமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடல் பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும்.

அத்துடன் இடியுடன் கூடிய மின்னல்கள் மற்றும் மணிக்கு 70 மற்றும 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலைகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் வாழும் மக்கள், ஆபத்து தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் மழை மற்றும் மின்னல் தொடர்பிலும், காற்றினால் ஏற்படுகின்ற கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இடி மற்றும் மின்னலின் போது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொது மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கயை இடி மின்னலின் போது வெளியிறங்கு பகுதிகளில் அல்லது மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான கட்டடம் மற்றும் வாகனங்களுக்கு இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வயல், தேயிலை தோட்டம், மைதானம் மற்றும் நீர்த்தேக்கம் போன்ற இடங்களில் அநாவசியமாக நிற்பதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இடி, மின்னல் தாக்கங்களின் போது தொலைபேசி பயன்பாடுகளை தவிர்க்குமாறு மக்களை திணைக்களம் கேட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்