B லோகோவில் புதிய வாட்ஸ் அப்: இவர்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது

Report Print Printha in ஆப்ஸ்
63Shares
63Shares
lankasrimarket.com

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலி தற்போது சரியான தொழிலதிபர்களை இனம் கண்டுகொள்ள புதிய வசதி வாட்ஸ் அப் பிசினஸ் என்ற புது வடிவில் வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ் அப் பிசினஸ் தொழிலதிபர்களுக்கு மட்டும் உதவும் வகையில் B என்ற லோகோவில் புதுவித வடிவில் உள்ளது.

இதன் மூலம் தற்போது வெரிபைட் தொழிலதிபர்கள் மற்றும் வெரிபைட் இல்லாத தொழிலதிபர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

எப்படியெனில், வாட்ஸ் அப் மூலம் ஒரு தொழிலதிபரிடம் சாட்டிங் செய்யும் போது அவர்களுடைய புரொபைலை பார்த்து அதில் பச்சை மார்க் இருந்தால் அவர் வெரிபைட் தொழிலதிபர் என்பதை கண்டு கொள்ளலாம்.

அதே நேரத்தில் சாம்பல் நிறத்தில்(gray color) கூடிய கேள்வி குறி இருந்தால் அந்த தொழிலதிபர் வாட்ஸ் அப் பயனாளியாக இருந்தாலும் அவர் இன்னும் வெரிபைட் செய்யப்படாதவர் என்பதை குறிக்கும்.

இந்த வாட்ஸ் அப்பை பதிவிறக்கம் செய்த பிறகு, அதில் வாட்ஸ் அப் பிசினஸ் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதில் ஆட்டோ ரெஸ்பான்ஸ், ஒரு தொழிலதிபரின் புரபைலை உருவாக்குவது, செட்டிங் மற்றும் அனாலிட்டிக்ஸ் ஆகியவை உண்டு.

மேலும் இந்த வாட்ஸ் அப்பில் அனுபவங்களை இதில் பதிவு செய்யும் வசதியும், வாட்ஸ் அப் அக்கவுண்டை பிளாக் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்