சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள்- மேஷம் முதல் கன்னி வரை

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்
0Shares
0Shares
lankasri.com

மேஷம் - அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை 9-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார் சனிபகவான். புதிய வியூகங்களால் எதிலும் சாதிப்பீர்கள். நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பகை வர்களும் நண்பர்கள் ஆவார்கள். நோய் பாதிப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். எனினும், தந்தைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடன்களைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால், கடின வேலைகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். வரவும் உண்டு செலவும் உண்டு.உங்களில் சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். மக்களின் ரசனைக்கேற்ப கொள்முதல் செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வங்கிக் கடனை அடைப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, போர்டிங், லாட்ஜிங், எண்ணெய் வகைகளால் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில், சக ஊழியர்களாலும், அதிகாரி களாலும் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மாணவ மாணவிகளே! கடுமையாக உழைப்பீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். கலைத் துறையினரே! பிற மொழி பேசுபவர்களால் புது வாய்ப்பு கள் வரும். அரசால் ஆதாயம் உண்டாகும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்

19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் திருப்பம் ஏற்படும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால், அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் விவாதங்கள், செலவுகள், அலர்ஜி, மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.

உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில், 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சளித் தொந்தரவு, காய்ச்சல் ஏற்பட்டு நீங்கும்.

உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டுக்கு உரிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் செல்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. கார்த்திகை நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபத்தைத் தவிர்க்கவும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்

சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், எந்த வேலையையும் திட்டமிட்டுச் செய் யவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும்.

சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். வீட்டுக்கான பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம் - கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

இதுவரை 7-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 8-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படவேண்டிய காலம் இது. மற்றவர்களை நம்பி ஏமாறவேண்டாம். குடும்பத்தில் சிலர் பிரச்னையை உண்டாக்க முயல்வார்கள். கவனம் தேவை.

மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். முக்கிய பத்திரங் களில் கையெழுத்து போடுமுன், சட்ட நிபுணரை ஆலோசித்து முடிவெடுக்கவும். பூர்வீகச் சொத்துப் பங்கைப் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். உடல் நலனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால், சாதுர்யமாகப் பேசுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழியினரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

மாணவ - மாணவிகளே! அன்றைய பாடத்தை அன்றன்றே படிப்பது நல்லது. கலைத் துறையினர்களே! வேற்றுமொழி பேசுபவரால் முன்னேற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் தேடி வரும். விமர்சனங்களையும், வதந்திகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, சிற்சில பிரச்னைகளில் சிக்கவைத்தாலும், கடின உழைப்பாலும் சமயோசித புத்தியாலும் உங்களைச் சாதிக்க வைக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்

19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். கிருத்திகை 2,3,4 மற்றும் மிருகசீரிடம் 1,2-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, இக்காலக்கட்டத்தில் புது வேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். ரோகிணி நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். கிருத்திகை 2,3,4 மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் நடக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல் ஆகியன வந்து செல்லும்.

25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு சுகாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வீடு, மனை சேரும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ரோகிணி மற்றும் மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். கார்த்திகை 2,3,4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறைக் காட்ட வேண்டும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரப் பலன்கள்

29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் தடைப்பட்ட வேலைகள் முடியும் கணவன் - மனைவிக்கு இடையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். கடன் பிரச்னை தீரும்.

சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கரிப்பதால், இக்காலக் கட்டத்தில் சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். குடும்பத் தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் சகோதரர்கள் மற்றும் தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும்.

மிதுனம் - மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

இதுவரை 6-ம் இடத்தில் இருந்து நன்மைகளைச் செய்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 7-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். கண்டகச் சனியாக இருப்பதால், எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும்.

விலை உயர்ந்த பொருள்கள், நகைகளைக் கவனமாகக் கையாளவும். வாழ்க்கைத் துணைக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சிலர், வேலையின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிய நேரிடும். கூடுமானவரை சொந்த வாகனத்தில் இரவுநேரப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், அலர்ஜியால் தோலில் நமைச்சல்,கட்டி,முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும். சனிபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும்.

வியாபாரிகளே! கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தவேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கவும். கடன் தருவதைத் தவிர்க்கவும். சிலருக்குக் கடையை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு பங்கு தாரர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அரிசி, பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகள் ஆதாயம் தரும்.

உத்தியோகஸ்தர்களே! விமர்சனத்தைத் தவிர்க்க வும். எதிர்பார்க்கும் சலுகைகள் தாமதமாகவே கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பழைய அதிகாரிகள் உதவி செய்வார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து போடவேண்டாம். மாணவ - மாணவிகளே! படிப்பில் அலட்சியம் கூடாது. விளையாட்டின்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர்களே! சிறிய வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, அனுபவ அறிவால் உங்களை வெற்றிபெற வைக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்

19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட புது வழி கிடைக்கும். முன்கோபம் விலகும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 3,4-ம் பாதம் மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து நீங்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். மிருகசீரிடம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதத்தில் பிறந்தவர்கள், எவரையும் விமர்சிக்கவேண்டாம்.

25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். உதவிகளும் கிடைக்கும். சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மிருகசீரிடம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்

29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். என்றாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், பிரிந்திருந்த தம்பதி ஒன்றூசேர்வீர்கள். மகளுக்கு வரன் பார்க்கும்போது கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கடகம் - புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 6-ல் அமர்ந்து விபரீத ராஜ யோகத் தைத் தரவுள்ளார். தடுமாற்றம் நீங்கும். வாழ்க்கையை வளப்படுத்த நல்ல வாய்ப்பு கள் அமையும்.

பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லா மல் இருந்தவர்களுக்கு, அழகும் அறிவும் நிறைந்த குழந்தை பிறக்கும். சகல காரியங்களிலும் வாழ்க்கைத் துணைவர் பக்கபலமாக இருப்பார். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். உங்களை உதாசீனப் படுத்திய உறவினர்களும் நண்பர்களும் தேடி வந்து உறவாடுவார்கள். சிலருக்கு சொந்த வீடு அமையும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். மகனுக்கு, தெரிந்த இடத்திலேயே சம்பந்தம் அமையும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனி பகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். சனிபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆலயங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

வியாபாரிகளே! அதிரடி லாபம் கிடைக்கும். பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்பு களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்கு வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும்.

இதுவரை நிலையான வேலை எதுவும் இல்லாமல் இருந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் நல்ல வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரி களுடன் இருந்த மோதல்கள் விலகும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

மாணவ - மாணவிகளே! முதல் மதிப்பெண் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்துப் படிப்பீர்கள். ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பார்கள். கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வருமானம் உயரும். மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி முடங்கிக் கிடந்த உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்

19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மேலும் புனர்பூசம் 4-ம் பாதம், மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய வேலைகள் தடைபட்டு முடியும்.

உங்களின் சுக - லாபாதிபதியாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத் தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். டென்ஷன் விலகும். வீடு மாறுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் வழி உறவினர் களால் ஆதாயம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் புனர்பூசம் 4-ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு விபத்துகள் ஏற்படலாம்.

25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் தன ஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத் திரம் முதல் பாதத்தில் செல்வதால், உங்களின் பேச்சில் கம்பீரம் பிறக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக் கும். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். புனர்பூசம் 4-ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் அமையும். ஆனால், பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்

29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் இழுபறியான வேலைகள் உடனடியாக முடியும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரமாவதால் வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும். பழைய பிரச்னைகளை நினைத்து வருந்துவீர்கள்.

சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

இதுவரை 4-ம் வீட்டில் இருந்த சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 5-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார். இனி நல்லதே நடக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை நல்லபடி முடிவுக்கு வரும். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். பணவரவு அதிகரிக்கும்.

கணவன் - மனைவிக்குள் அந்நி யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். கருவுற்ற பெண்கள் தொலை தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு கை,கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். வீண் விவாதங்கள் வந்து போகும். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நெடுநாட்களாக வராமலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். மூத்த சகோதரர்கள் இணக்கமாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரிகளே! பற்று வரவு உயரும். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். விளம்பர சாதனங்களைப் பயன்படுத்தி, விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். வி.ஐ.பி.-க்களும் வாடிக்கை யாளர்களாக அறிமுகம் ஆவார்கள். ஏற்றுமதி - இறக்குமதி, கடல்வாழ் உயிரினங்கள், ஏஜென்சி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபம் உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே! பணிச் சுமை குறையும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கடின வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினித் துறையினருக்கு வெளி நாட்டில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். மாணவ - மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வீர்கள். கலைத் துறையி னருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும். மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, குழப்பங் களில் இருந்து உங்களை விடுவிப்பதுடன், வெளி வட்டாரத்தில் செல்வாக்கு ஏற்படுத்துவதாகவும் அமையும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்

19.12.17 முதல் 18.1.19 வரை மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால், சொத்துச் சேர்க்கையுண்டு. சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் புதிதாக வாங்குவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. பூரம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். உங்களின் தைரியஸ்தானாதிபதியும் யோகாதிபதியு மாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத் தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை; 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், வீடு,வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். மகம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் ராசிநாதனாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய பிரச்னைக்குத் தீர்வு கிட்டும். கௌரவ பதவிகள் தேடி வரும். வருமானம் உயரும். ஆனால், மகம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக் கிறது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் உண்டாகும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்

29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் உண்டாகும். கடன் பிரச்னை தொல்லை தரும். ஆரோக்கியம் மேம்படும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை; 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால் வீண் செலவுகள், அலைச்சல், வேலைகளில் இழுபறி நிலை உண்டாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வ தால், இக்காலக்கட்டத்தில் செல்வாக்கு, புகழ் கூடும். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.

கன்னி - உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை அர்த்தாஷ்டமச் சனியாக அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார் சனி பகவான். அலைச்சல் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தவிர்க்கமுடியாத செலவுகள் அதிகரிக்கும்.

மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்பு களை ஒப்படைக்கவேண்டாம். வீடு வாங்குவது விற்பது இழுபறியாகித்தான் முடியும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்க்கவும். அதிக வட்டிக்குக் கடன் வாங்கவேண்டாம். இரவு நேரப் பயணங்களில் கவனமாக இருக்கவும். விலை உயர்ந்த பொருள்களை இரவல் தருவதையும் வாங்குவதையும் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிக்கு இடையேயான பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். உரிய அனுமதி பெற்ற பிறகு வீடு கட்டும் பணியைத் தொடங்கவும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், அவ்வப்போது சோர்வு வந்து நீங்கும். கோபம் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் புது பொறுப்புகளும் தரப்படும்.

வியாபாரத்தில், போட்டிகள் அதிகரிக்கும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் லாபம் உண்டாகும். பங்குதாரர்களிடையே அவ்வப்போது கருத்து வேறு பாடுகள் ஏற்பட்டாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள். பணியாட்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். எலெக்ட் ரானிக்ஸ், கணினி, மூலிகை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், சூழ்ச்சிகளைக் கடந்து முன்னேறுவீர்கள். மேலதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். முக்கியக் கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். சிலருக்கு ஏமாற்றங்களும் மறைமுக அவமானங்களும் ஏற்பட்டு நீங்கும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினித் துறையினருக்கு கண்களில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும். மாணவ-மாணவிகளே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் வேண்டாம். கலைத் துறையினருக்கு வேற்று மொழி பேசுபவர்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு வாழும் வகையைக் கற்பிப்பதாக அமையும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்

19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்க நகைகளின் சேர்க்கை உண்டாகும். உத்திரம் 2,3,4 மற்றும் சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். ஆனால், அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணைவரை அனுசரித்து செல்லவும்.

உங்களின் தன - பாக்கியாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், இக்காலக்கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும். பெருந்தன்மையாகப் பேசி, காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்திரம் 2,3,4-ம் பாதம் மற்றும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முன்கோபம் அதிகரிக்கும். 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான், உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், அரைகுறை யாக நின்ற வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். சொத்து பிரச்னை சுமுகமாகும். அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் உண்டாகும். உத்திரம் 2,3,4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களுடன் கருத்துமோதல்கள் உருவாகும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்

29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள்.

சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயாரின் உடல் நலத்தில் அக்கறைக் காட்டுங்கள்.

துலாம் முதல் மீனம் வரை- ராசிபலன்கள்

- Vikatan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்