பிரித்தானிய இளவரசர் ஹரியை சந்தித்தார் ஒபாமா: சுவாரசிய உரையாடல்

Report Print Raju Raju in கனடா
108Shares
108Shares
lankasrimarket.com

கனடாவில் நடந்த Invictus விளையாட்டு போட்டிகள் நிகழ்வில் இளவரசர் ஹரி மற்றும் பராக் ஒபாமா சந்தித்து உரையாடியுள்ளனர்.

கனடாவின் டொரண்டோவில் Invictus விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 23-ம் திகதியிலிருந்து 30-ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்நிகழ்வை பிரித்தானிய இளவரசர் ஹரி முன்னின்று நடத்திய நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஹரியும், அவர் காதலி மேகனும் முதல்முறையாக ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.

இதில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் கலந்து கொண்டார். இளவரசர் ஹரியின் அருகில் உட்கார்ந்திருந்த ஒபாமா அவருடன் மகிழ்ச்சியாக உரையாடினார்.

நிகழ்ச்சியில் Hayley Stover என்ற மாணவி கலந்து கொண்ட நிலையில் ஹரி, ஒபாமா பேசியது குறித்து வெளியிட்டுள்ளார்.

மேகன் மற்றும் ஹரியின் காதல் குறித்து ஒபாமா விசாரித்தார். Invictus விளையாட்டு போட்டிகளை மேகன் ரசிக்கிறாரா எனவும் ஹரியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு சிரித்து கொண்டே நன்றாக ரசிக்கிறார் என ஹரி தெரிவித்தார்.

மேகன் நடித்து வரும் டிவி தொடர் குறித்தும் ஒபாமா விசாரித்தார். அதே போல ஒபாமா மனைவி மிச்செல் நலம் குறித்து ஹரி அவரிடம் கேட்டறிந்ததாகவும் Hayley கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்