இலங்கை அணித்தலைவர் பதவியிலிருந்து மேத்யூஸ் ராஜினாமா

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து ஏஞ்சலா மேத்யூஸ் ராஜினாமா செய்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரையும் 3-2 என இழந்த நிலையிலேயே மேத்யூஸ் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

அடிக்கடி காயங்களால் பாதிக்கப்பட்ட மேத்யூஸ் தலைமைப் பதவியில் கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை 3-0 என வைட் வொஷ் செய்தது முக்கிய தருணமாக கருதப்படுகிறது.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஜூலை மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள ஜிம்பாப்வே உடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் தலைவராக செயற்பட வாய்ப்பு இருப்பதோடு உபுல் தரங்க இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments