மதுபான விடுதியை கபளீகரம் செய்த கால்பந்து ரசிகர்கள்: 52 பேர் கைது

Report Print Arbin Arbin in கால்பந்து
77Shares
77Shares
lankasrimarket.com

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் போது, மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்ட 52 ரசிகர்களை உக்ரைன் காவல்துறை கைது செய்துள்ளது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் உக்ரைனை சேர்ந்த ஷக்டார் டோனட்ஸ்க் மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த ஃபேயநூர்டு அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஃபேயநூர்டு அணி மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்விளைவாக போட்டி நடைபெற்ற கார்கிவ் நகரில் உள்ள மதுபான விடுதியில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டன.

வன்முறையில் இறங்கிய நெதர்லாந்து ரசிகர்கள் 40 பேர் உட்பட 52 பேரை உக்ரைன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்