முக ஒப்பனைக்காக இவ்வளவு தொகை செலவு செய்தாரா மேக்ரான்?

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரான்ஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் 3 மாத காலத்தில் 26,000 யூரோ அளவுக்கு ஒப்பனைக்காக மட்டும் மேக்ரான் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்(39) பொதுமக்கள் மத்தியில் வசீகர தோற்றத்துடன் வலம்வருவதற்காக தனக்கென சிறப்பு ஒப்பனைக் கலைஞர் ஒருவரை நியமித்துள்ளார்.

advertisement

அவரது பரிந்துரையின்படி ஜனாதிபதி பொறுப்பேற்றது முதல் 3 மாத காலத்தில் 26,000 யூரோ அளவுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தை ஒப்பனைக்காக மட்டும் மேக்ரான் செலவு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜனாதிபதி மேக்ரான் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் முன்னர் அல்லது பொதுமக்களை சந்திக்க செல்லும் முன்னர், குறித்த ஒப்பனைக் கலைஞர் மேக்ரனுக்கு ஒப்பனை செய்து அனுப்புவதாக கூறப்படுகிறது.

தன்னை விட 25 வயது மூத்தவரான Brigitte என்பவரை திருமணம் செய்திருந்தும், இளைஞர் தோற்றத்தில் பொதுமக்களிடையே வலம்வருவதையே மேக்ரான் எப்போதும் விரும்புவதாக அவரது எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி இருவரும் இளைஞர்கள் போலவே கடற்கரையில் உலாவருவதும், மிதிவண்டி பயணம் மேற்கொள்வதும் பொதுமக்களிடையே கேலிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேக்ரான் மட்டுமல்ல, முன்னாள் ஜனாதிபதி Francois Hollande தமது ஆட்சி காலத்தில் ஒப்பனைக்காக மட்டும் 3 மாத காலத்தில் 30,000 யூர் செலவு செய்துள்ளார்.

இவரைப் போன்றே நிக்கோலாஸ் சார்க்கோசி மாதந்தோறும் 8,000 யூரோ செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்