பனிப்பாறையில் சிக்கி ஐந்து நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட ஜேர்மானியர்

Report Print Kabilan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஆஸ்திரியாவில் பனிப்பாறைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட ஜேர்மன் மலையேற்று வீரர் ஐந்து நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியை சேர்ந்த மலையேற்ற வீரர் காணாமல் போனதாக, அவரது தந்தை ஆஸ்திரியாவின் Salzburg நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரியாவின் அவசர உதவிக்குழு தேடியதில் குறித்த நபர், நூறு அடிகள் இடைவெளிகள் உள்ள பனிப்பாறைகளுக்கு நடுவே சிக்கியிருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து மீட்புக்குழுவில் ஒருவரான Christoph Preimesberger கூறுகையில், குறித்த நபர், தான் பனிப்பாறைகளில் சிக்கிய போது தனது கைப்பேசியில் அவசர உதவி எண்ணிற்கு அழைத்துள்ளார். ஆனால் சிக்னல் கிடைக்காததால் அந்த அழைப்புகள் எவருக்கும் போகவில்லை.

அவரை மீட்டபோது தோள்பட்டை மற்றும் கால்களில் அவரின் உடலில் சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தது, ஐந்து நாட்களாக உள்ளேயே இருந்ததால் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தோம் என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரிய சட்ட திட்டங்களின் படி அவர் யார் என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்