கார் விற்பனையில் வளர்ச்சியை எட்டிய ஜேர்மனி

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
179Shares
179Shares
lankasrimarket.com

கடந்த 2017 ஆம் ஆண்டில் தான் ஜேர்மனி வீதிகளில் அதிகளவிலான கார்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் விற்பனையும் அதிகரித்துள்ளதாகவும் அரசாங்கம் மற்றும் தொழிற்துறையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

புதிதாக 2.7 வீதமான புதிய வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் 3.4 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டர் கைத்தொழில் கூட்டமைப்பு மற்றும் வாகன அனுமதி ஆணையத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஜேர்மனியின் வாகன சந்தையின் விற்பனை கடந்த ஆண்டிலேயே அதிகரித்துள்ளது என மோட்டார் வாகன தொழிற்துறை கூட்டமைப்பின் தலைவர் மெத்தியஸ் விஸ்மன் கூறியுள்ளார்.

வேஸ்க்வேகன், போஷ் போன்ற பெரிய நிறுவனங்களின் வாகனங்களும் சிறிய நிறுவனங்களின் வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இது உள்நாட்டு வாகன விற்பனை சந்தையின் வளர்ச்சி என தொழிற்சங்கங்கள், தொழிற்துறை தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்