ஜேர்மனியில் பொதுமக்கள் மீது பயங்கர விபத்தை ஏற்படுத்தியவன் யார்? பொலிசார் விளக்கம்

Report Print Santhan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனில் பொதுமக்கள் மீது அதிவேகமாக வேனை வைத்து விபத்தை ஏற்படுத்திய நபர் ஒரு மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட நபர் என்று பொலிசார் கூறியுள்ளார்.

ஜேர்மனியின் Münster பகுதியில் உள்ள Grosser Kiepenkerl bar உணவகத்தில்(திறந்த வெளி உணவகம்) இன்று பிற்பகல் உள்ளூர் நேரப்படி 3.27 மணியளவில் அதிவேகமாக வந்த வேன் ஒன்று அங்கிருந்த மக்களை மீது அதிபயங்கரமாக மோதியது.

இதனால் டிரைவர் உட்பட நான்கு பேர் பலியாகியிருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 6 பேர் மிக மோசமான நிலையில் இருப்பதாக முதல் கட்டத் தகவலில் வெளியாகியது.

அதுமட்டுமின்றி விபத்தை ஏற்படுத்தியவன் விபத்திற்கு பின் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டதால் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்றும், கடந்த ஆண்டு ஸ்டாக் ஹோம் பகுதியில் இதே திகதியில் தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக 5 பேர் பலியாகினர், 14 பேர் காயமடைந்திருந்தனர்.

தீவிர்வாத தாக்குதலாக தான் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இது எந்த ஒரு தீவிரவாத கும்பலுக்கும் சம்பந்தம் கிடையாது எனவும், விபத்தை ஏற்படுத்திய நபரின் பெயர் Jens Handeln(48) எனவும், ஜெர்மனியைச் சேர்ந்தவரான இவர் மனதளவில் பல பிரச்சனைகளை கொண்டுள்ளார்.

தற்போது வரை அவரைப் பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கும், தீவிரவாதத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் விபத்தை உண்டாக்கிய டிரைவர் பற்றிய தகவல் தெரிந்தவுடன் பொலிசார் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அவரது வீட்டில் சில பொருட்களை பொலிசார் கண்டு பிடித்துள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்தியிருந்த காரில் ஒரு மர்மமான பை ஒன்றை பொலிசார் கண்டு பிடித்துள்ளதாகவும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து தற்போது வரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்