ஒருவர் விட்டு ஒருவர் கொட்டாவி.. அப்படி வருவது ஏன்?

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

கூட்டமாக அமர்ந்திருக்கும் ஒரு இடத்தில் ஒருவர் கொட்டாவி விட்டால், அங்குள்ள அனைவருக்குமே அது பரவும். இதை பலமுறை நாம் கவனித்து இருப்போம்.

ஆனால் இந்த கொட்டாவி தொடர்ச்சியாக அனைவருக்கும் ஏற்படுவது இயல்பாக இருந்தாலும், அவ்வாறு ஏற்படுவதற்கான காரணத்தை நீங்கள் யோசித்தது உண்டா?

கொட்டாவி தொடர்ச்சியாக ஏற்படுவது ஏன்?
advertisement

கொட்டாவி என்பது ஒரு நோய் அல்ல. அது ஓரு அறிகுறி மட்டுமே. அடிக்கடி கொட்டாவி வந்தால், அதற்கு நல்ல ஓய்வு மற்றும் தூக்கம் தேவை என்று அர்த்தம். கொட்டாவி வருவதால் வாய், நாக்கு, தசைகள் ஆகியவை ரிலாக்ஸ் அடைகிறது.

இந்த கொட்டாவி ஒரு அனிச்சை செயலாகும். எனவே சலிப்பான சூழலில் அமர்ந்திருக்கும் போது, ஒருவர் கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்ட அந்த இடத்தில் உள்ளவர்களுக்கும், மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது.

கொட்டாவியின் செயலானது, ஆக்சிஜனை உள்ளிழுத்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியில் அனுப்புகிறது. இச்செயலை மூளை நுரையீரலுக்கு அனுப்பும்.

ஆனால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள இதய நோயாளி மற்றும் பக்கவாத நோயாளிகளுக்கு கொட்டாவி வந்தால், அவர்களின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும்.

ஏனெனில் அது மூளைக்குச் செல்கின்ற ஆக்சிஜன் குறைந்துள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறியாக கூட இருக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments