இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! அச்சத்தில் பொது மக்கள்

Report Print Murali Murali in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய தலைநகர் டெல்லியில் இன்று இரவு சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டதையடுத்து பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

டெல்லியில் இன்று இரவு கடுமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலியை மையமாகக் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. அம்மாநிலத்தின் ஹரித்துவார், ருத்பிரயாக் உள்ளிட்ட பல இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இதன் எதிரொலியாகவே டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்நில அதிர்வால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்