ஓடும் பேருந்தில் இளம்ஜோடிகள் செய்த காரியம்: முகம் சுழித்த பொதுமக்கள்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஈரோடு அருகே ஓடும் பேருந்தில் இளம்ஜோடி ஒன்று சிரித்துப் பேசியபடியே பலமுறை முத்தம் கொடுத்த சம்பவம் சக பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது.

ஈரோடு, ராசிபுரத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தில் தான் குறித்த சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து குறித்த பேருந்தில் ஏறிய அந்த ஜோடி இருவர் மட்டுமே அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்துள்ளது.

பேருந்து அங்கிருந்து புறப்பட்டதில் இருந்தே இருவரும் விழுந்து விழுந்து சிரித்தபடி மகிழ்ச்சியுடன் வந்துள்ளனர். பேருந்தில் போதிய கூட்டம் இல்லை என்பதால் இருவரும் சத்தமிட்டே பேசிய படி வந்துள்ளனர்.

அப்போது காற்றில் பறந்த அந்த பெண்ணின் தலை முடியை அந்த இளைஞர் கோதிவிட்டுக் கொண்டே வந்துள்ளார். பதிலுக்கு அந்த இளைஞரின் கன்னத்தில் இருக்கும் வியர்வை துளிகளை அந்த இளம்பெண் தனது சேலையால் ஒப்பியுள்ளார்.

திடீரென அந்த இளைஞர் அந்த பெண்ணின் கன்னத்தில் முத்தமிட... பதிலுக்கு அந்த இளம் பெண்ணும் முத்தமிட அந்த பேருந்து இவர்கள் இருவரின் காதல் வாகனமாக மாறி விட்டது.

வெகு நேரமாக இதை நோட்டமிட்டபடி பார்த்த பயணிகள் சிலர் முகம் சுழித்தனர். ’இவர்கள் புதுமண தம்பதியாகவே இருக்கட்டும் அதற்காக ஓடும் பேருந்தில்ல் இப்படியா கொஞ்சி விளையாடுவது? இது அநாகரீகமாக இல்லையா? என்றும் பயணிகள் முணு முணுத்தனர். ஆனாலும் அந்த இளம்ஜோடிகள் இவை எதையுமே கண்டுகொள்ளாமல் இருவர் மடியிலும் மாறி மாறி படுத்துக்கொண்டே சென்றுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments