உணவால் ஏற்பட்ட பிரச்சனை: மனைவியை கொன்று விட்டு கணவன் தற்கொலை

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

சகோதரிக்கு கறி சாப்பாடு செய்து தரவில்லை என்ற கோபத்தில் மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையை அடுத்த எண்ணூரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி சரளா. இவர்கள் தங்கியிருக்கும் சுனாமி குடியிருப்பிலேயே இந்த தம்பதி சிற்றுண்டி கடை நடத்தி வந்தார்கள்.

இந்நிலையில், நேற்று மோகன் வீட்டுக்கு அவர் சகோதரி வந்துள்ளார். அப்போது தனது சகோதரிக்கு கறி சாப்பாடு சமைத்து தருமாறு சரளாவிடம் மோகன் கூறியுள்ளார்.

இதற்கு சரளா மறுத்ததையடுத்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மோகன், சரளாவை கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் அவரை தூக்கில் தொங்கவிட்டு மோகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments