ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விஷம் முறிக்கும் மருந்தாக பாம்பின் விஷம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாம்பு விஷத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது.

இதற்காக சில சமூக விரோதிகள், பாம்புகளை பிடித்து அதன் விஷத்தை எடுத்து கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் மேற்கு வங்க மாநிலம் பாராசாத் பகுதியில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது.

பாம்பு விஷத்தை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 3 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்