ரத்த காயங்களுடன் பாலியல் வன்கொடுமை: தொடர் கொலைகளுக்கு காரணம் யார்?

Report Print Fathima Fathima in இந்தியா
151Shares
151Shares
lankasrimarket.com

கடந்த மூன்று நாட்களாகவே ஸ்ரீதேவி பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக கவனித்து வரும் தமிழக ஊடகங்களுக்கு விழுப்புரம் சம்பவம் நினைவில்லாமல் போனது ஏன்?

8 வயது சிறுவனை தாக்கிவிட்டு, தாயையும், மகளையும் தலையில் தாக்கி ரத்த காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பொலிசாரோ தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர், இது முதல் முறையல்ல, இதற்கு முன்பும் இரண்டு முறை இவ்வாறு சம்பவம் நடந்துள்ளதாம்.

விழுப்புரத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வெள்ளம்புத்தூர்.

தீவு போன்று தனியாக உள்ள கிராமத்தில் பெண்கள் அதிகம் வசிக்கின்றனர்.

கடந்தாண்டு மே மாதம் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூங்கிக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டனர், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

அதேபோன்று 2017 அக்டோபர் மாதமும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த இரண்டு மகள்களுடன் தூங்கிக் கொண்டிருந்த தாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

மூன்று சம்பவங்களுக்குமே ஒரு ஒற்றுமை இருந்துள்ளது, தலையில் தாக்கிய பின்னர் ரத்த வெள்ளத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்களை மிக கொடுமையாக தலையில் பலத்த காயங்கள் படும்படி அடித்துள்ளனர்.

இதை ஒருவரோ, குறிப்பிட்ட கும்பலோ செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறும் பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்களாம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்