டோனி வசிக்கும் பங்களாவை பார்த்திருக்கீங்களா? பிரம்மிப்பான வீடியோ இதோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
304Shares
304Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் பிரம்மாண்ட வீடு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சிக்கு அருகில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள புதிய பங்களாவில் வசித்து வருகிறார் டோனி.

இந்த பங்களாவை கட்ட மூன்றாண்டுகள் ஆனது.

இங்கு பச்சை வண்ணத்தை கொட்டியதுபோல் எங்கு பார்த்தாலும் பசுமை. வீட்டுக்கு உள்ளேயும் சிறு செடிகளை வளர்த்து வருகிறார். பார்த்து பார்த்து, ஒவ்வொரு செடி, மரங்களை நட்டு வைத்துள்ளார் டோனி.

Back home !!! 💃🏻💃🏻💃🏻💃🏻❤️❤️❤️

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

கைலாஷ்பதி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபார்ம் ஹவுசில் நீச்சல் குளம், பல்வேறு விளையாட்டுகள் விளையாட இண்டோர் ஸ்டேடியம், பூங்காக்கள், வாகனங்கள் நிறுத்த மிகப் பெரிய வசதி என பிரம்மாண்ட வசதிகள் உள்ளன.

அவருடைய வீட்டில் நான்கு நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அவை சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கு ஏற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாய்கள் தூங்குவதற்காக தனியாக படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இங்கு டோனி பயன்படுத்தும் பலவிதமான பைக்குகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்