நினைவாற்றல் இழக்கப்படுவதை மீட்க உதவும் புதிய புரதம்!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
215Shares
215Shares
lankasrimarket.com

அல்ஸைமர் போன்ற நோய்களினால் நினைவாற்றலானது இழக்கப்படுகின்றது.

இழக்கப்படும் நினைவாற்றலை மீட்பதற்கு தற்போது எதுவிதமான சிகிச்சை முறைகளும் இல்லை.

எனினும் விசேட நொதியம் ஒன்றின் மூலம் இது சாத்தியப்படும் என MIT ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நொதியத்திற்கு தேவையான புரதத்தினை உருவாக்கும் முயற்சியில் குறித்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அல்ஸைமர் நோயானது Beta Amyloid எனும் பதார்த்தத்தின் தாக்கத்தினால் ஏற்படுகின்றது.

இப் பதார்த்தத்தின் செயற்பாட்டினை தற்போது உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நொதியம் ஆனது கட்டுப்படுத்தக்கூடியது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்