விமலின் முக்கிய சகாக்கள் ஜனாதிபதி அலுவலகத்தில்

Report Print Dias Dias in இலங்கை
0Shares
0Shares
lankasrimarket.com

விமல் வீரவன்சவின் முக்கிய சகாக்களான மூவர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் பி.பீ. குமார ஆகியோர் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர்.

இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளதுடன், எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்