இளம்பெண் மீது பாலியல் தாக்குதல்: இருவருக்கு பொலிஸ் வலை வீச்சு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய இருவரை அந்நாட்டு பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுவிஸில் உள்ள St. Gallen நகரில் தான் இத்துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் 26 வயதான பெண் ஒருவர் வணிக வளாகம் ஒன்றிற்கு வெளியே தனியாக அமர்ந்திருந்துள்ளார்.

அப்போது, இரண்டு நபர்கள் பெண்ணின் அருகில் அமர்ந்துள்ளனர். பெண்ணிடம் பேச்சுக்கொடுத்த இருவரும் திடீரென அவர் மீது பாய்ந்து கற்பழிக்க முயன்றுள்ளனர்.

நபர்களின் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த பெண் உதவிக்கேட்டு அலறியுள்ளார். மேலும், இருவரையும் எதிர்த்து துணிச்சலாக போராடியுள்ளார்.

சில நிமிடங்களில் பெண்ணை எதிர்க்கொள்ள முடியாத இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த சிலர் பெண்ணிற்கு உதவி செய்துள்ளனர். மேலும், பெண்ணை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்ற பொலிசார் தாக்குதல் நடத்திய இருவரின் அடையாளங்களை சேகரித்துக்கொண்டு இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்