புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் பிரித்தானியாவுக்கு பிரச்னை: வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

ஏற்கனவே 'Beast from the East' என்றழைக்கப்பட்ட சைபீரியக் காற்றுகள் கொண்டுவந்த மழையும் பனியும் ஒரு பக்கம், எம்மா புயல் ஏற்படுத்திய கடும் சேதம் இன்னொரு பக்கம் பிரித்தானியாவைப் புரட்டி எடுக்க,

மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் 'Pest from the West' என்று அழைக்கப்படும் மோசமான வானிலை மழையையும் பனியையும் கொண்டு வரலாம் என்னும் செய்தி மீண்டும் மக்களை விரக்தியடையச் செய்துள்ளது.

பனியால் உறைந்து பல தண்ணீர் குழாய்கள் உடைந்ததால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறை ஒரு பக்கம் வாட்டி வதைக்க இப்போது தான் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு போதுமான பொருட்கள் வரத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மீண்டும் மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு பிரித்தானியா, மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளை வியாழக்கிழமை அதிகாலையில் பனி தாக்கலாம் என்றும் ஸ்காட்லாந்தை பனியும் மழையும் தாக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பிரித்தானியாவின் தென் மேற்கு கடற்கரை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

வெள்ளி இரவு வடக்கு நோக்கி நகர இருக்கும் மழை சனிக்கிழமை பலத்த மழையாக மாறலாம். வார இறுதி ஸ்காட்லாந்துக்கு அதிக பனியைக் கொண்டுவரும் வாய்ப்புள்ளது.

அடுத்த வாரத்திலும் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். அடுத்த வாரத்தின் நடுவில் நாட்டின் தெற்கு மற்றும் மத்தியப்பகுதிகளில் சற்று உலர்ந்த மற்றும் மிதமான வானிலையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்