அட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

வீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாக ஸ்கைப் காணப்படுகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனில் 50 பேர் வரையானவர்கள் ஒரே நேரத்தில் குழுவான அழைப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வசதியினை வழங்குவது தொடர்பில் மைக்ரோசொப்ட் நிறுவனம் பரீட்சிப்புக்களை மேற்கொண்டு வந்தது.

பரீட்சிப்பு வெற்றியளித்ததன் பயனாக கடந்த வியாழக் கிழமை பயனர்களின் பயன்பாட்டிற்காக இவ்வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வியாபார நிறுவனங்களுக்கு இடையிலான கான்பரன்ஸிங் மற்றும் ரீயூனியன் கான்பரன்ஸிங் என்பனவற்றினை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன்னர் 25 வரையானவர்கள் குழு அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்