மேலும் பல தீங்கு பயக்கும் அப்பிளக்கேஷன்கள் கூகுள் பிளே ஸ்டோரில் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

அண்மைக்காலமாக கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பல அப்பிளிக்கேஷன்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

இவை பயனர்களின் தகவல்களை திருடக்கூடியதாகவும், தீங்கு பயக்கக்கூடியதாகவும் காணப்பட்டன.

இதேபோன்று தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் மேலும் 172 தீங்கு விளைவிக்கும் அப்பிளிக்கேஷன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த அப்பிளிக்கேஷன்கள் அனைத்தும் கடந்த செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 335 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESET நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான Lukas Stefanko இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இவற்றில் அனேகமான அப்பிளிக்கேஷன்கள் அநாவசியமான விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்