திருடி பிழைக்கும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்..! வெளிச்சத்திற்கு வந்தது உண்மை முகம்

Report Print Basu in ஆசியா

வட கொரியா அதன் ஆயுத மற்றும் ஏவுகணை சோதனை திட்டத்திற்கு நிதியளிக்க சைபர் தாக்குதல்கள் மூலம் 2 பில்லியன் டொலர் திருடியதாக, கசிந்த ஐ.நா அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மிகவும் ரகசியமான ஐ.நா அறிக்கையில், வங்கிகள் மற்றும் கிரிப்டோ-நாணய பரிமாற்றங்களின் மூலம் வடகொரியா பணத்தை பெற்றதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக நடத்தப்பட்டுள்ள 35 சைபர் தாக்குதல் குறித்து ஐ.நா விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது, கடந்த இரண்டு வாரங்களில் வடகொரியா மேற்கொண்ட நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும்.

புதன்கிழமை வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவால் கூட்டு ராணுவ பயிற்சிகள் மேற்கொள்வதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். மேலும், இந்த ராணுவ பயிற்சி அமைதி ஒப்பந்தத்தை மீறும் செயல் என வடகொரியா குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் வட கொரியாவின் பொருளாதாரத் தடைக் குழுவிற்கு அனுப்பப்பட்ட அறிக்கை கசிந்துள்ளது. அதில், வடகொரியா அதிநவீன தாக்குதல்களை மேற்கொள்வதற்கு வருமானத்தை ஈட்டுவதற்காக, நிதி நிறுவனங்களிடமிருந்தும், கிரிப்டோ-நாணய பரிமாற்றங்களிடமிருந்தும் நிதியைத் திருட சைபர்-தாக்குதலை பயன்படுத்தியது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணத்தை பெற வடகொரியாவால் உருவாக்கப்பட்ட இணைய திருட்டு நடவடிக்கை குறித்தும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக கப்பல்-க்கு-கப்பல் இடமாற்றங்கள் மூலமாகவும், பேரழிவு ஆயுதங்கள் தொடர்பான பொருட்களைப் பெறுவதன் மூலமாகவும் ஐ.நா பொருளாதாரத் தடைகளை வட கொரியா மீறியுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்