சீனாவின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்! அதிபர் ஜிங்பிங் மறைமுக எச்சரிக்கை

Report Print Karthi in ஆசியா
66Shares

சீனா தனது இறையாண்மையையும், பாதுகாப்பையும், அபிவிருத்தி நலன்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தற்போது கூறியுள்ளார்.

1950-53 போரின்போது அமெரிக்கத் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தென் கொரியப் படைகளை எதிர்த்துப் போராட வடகொரியாவுக்கு உதவ சீனத் துருப்புக்கள் கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பப்பட்ட 70 வது ஆண்டு விழாவில் கொண்டாட்டத்தில் பேசிய ஜின்பிங் மேற்குறிப்பிட்ட தகவலை தெரிவித்தார்.

ஒருதலைபட்சம், ஏகபோகம் மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றும், அது ஒரு முற்றுப்புள்ளிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி ஜின்பிங் பெய்ஜிங்கில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

"சீன மக்கள் இப்போது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அற்பமானவர்கள் அல்ல என்பதை உலகிற்கு தெரியப்படுத்துங்கள்" என்று சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகத் தந்தை மாவோ சேதுங்கின் வரிகளை ஜின்பிங் மேற்கோள் காட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் அரசாங்கத்துடனான மோதல்களுக்கு மத்தியில் சீனாவுடனான உறவுகள் கடந்த காலகட்டத்தை விட தற்போது மிகவும் சுருங்கியுள்ள நிலையில் அவர் அமெரிக்கா குறித்து எந்த விமர்சனத்தையும் பதிவு செய்யவில்லை.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளின் நவீனமயமாக்கலை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். "ஒரு வலுவான இராணுவம் இல்லாமல், வலுவான தாய்நாடு இருக்க முடியாது," என்று அவர் கூறினார்.

உலக வல்லரசு நாடு என்று சொல்லப்படக்கூடிய நாட்டிற்கு சவாலாக சீனா மிகப்பெரும் பொருளாதார பலத்துடன் வளர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்