உங்கள் ராசியை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள முடியுமாம்!

Report Print Jayapradha in ஜோதிடம்

அனைவருமே இன்றைய நாள் அல்லது இந்த வாரத்திற்கான நம் ராசி பலன் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோம்.

மேலும் ஒருவரது ராசியை வைத்த அவர்கள் எப்படிபட்டவர் என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகின்றன.

மேஷ ராசிகாரர்கள்

இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் மிகப்பெரிய இலட்சியவாதிகளாக இருப்பார்கள். தெய்வபக்தி மிக்கவர்கள், முன்னோர்கள் வழிபாட்டு முறையை பின்பற்றுவார்கள். சுவாமி

ரிஷப ராசிகாரர்கள்

இந்த ராசிகாரர்கள் கடவுளிடம் நிறைய வேண்டுதல் வைப்பவர்கள். இவர்கள் தொழில் முன்னேற்றத்துக்காக இறைவழிபாடு அதிகமாக செய்வார்கள்.

மிதுனம் ராசிகாரர்கள்

தனது ஒவ்வொரு செயலும் இறைவனால் தான் நடந்தது என மனதார நம்புவார்கள். கோவிலில் கூறப்படும் மந்திரத்தை கேட்டு மகிழ்ந்தவாறே இறைவழிபாடு செய்பவர்கள்.

கடகம் ராசிகாரர்கள்

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என இருப்பவர்கள். இவர் அதிகமாக கோவிலுக்கு சென்று நீராட விரும்புவார்கள். இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆசை கொள்வார்கள்.

சிம்ம ராசிகாரர்கள்

தனது இஷ்ட தெய்வத்தை தவறாமல் வழிபடுபவர்கள். குரு உபதேசத்துடன் தெய்வத்தை தனது காதலனாகவோ, நண்பனாகவோ பாவித்து வழிபடுபவர்கள்.

கன்னி ராசிகாரர்கள்

தாய் தந்தையரை தெய்வமாக வழிபடக்கூடியவர்கள், தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தெய்வ வழிபாடு செய்வார்கள். செல்வ மேன்மைக்காக தெய்வமாக வழிபடக்கூடியவர்கள்.

துலாம் ராசிகாரர்கள்

இறைவனின் வளாகத்தை சுற்றி வருவதில் ப்ரியம் உள்ளவர்கள். இறைவன் மூலம் ஆதாயம் பெறுபவர்கள். கடவுள் பற்றிய விசயத்தை மற்றவருக்கு சொல்லும் குணமுடையவர்கள்.

விருச்சிக ராசிகாரர்கள்

கோவிலுக்கு சென்று நீராட விரும்புவார்கள். தாயாரை தெய்வமாக வழிபடக்கூடியவர்கள், பெண்தெய்வத்தை அதிகம் வழிபடுவார்கள். இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆசை கொள்வார்கள்.

தனுசு ராசிகாரர்கள்

நான் கடவுள் என்று சொல்லும் அளவுக்கு இருப்பார்கள். தன்னம்பிக்கையாளர். தர்ம ஒழுக்க நெறியோடு இறைவனை காண மற்றவருக்கு உபதேசம் செய்பவர்கள்.

மகர ராசிகாரர்கள்

கடவுளுக்காக எதையும் செய்பவர்கள். கடவுள் தான் நினைப்பதை செய்வார் என்று மனதார நம்புபவர்கள். இறை காரியங்கள் நிறைய செய்பவர்கள்.

கும்ப ராசிகாரர்கள்

கடவுள் பற்றிய உண்மைகளை மற்றவருக்கு சொல்லும் குணமுடையவர்கள். இறைவன் மூலம் ஆதாயம் பெறுபவர்கள். புராண இதிகாச காலசபங்களை கேட்டு மகிழ்வார்கள்.

மீன ராசிகாரர்கள்

செய்யும் தொழிலே தெய்வம் என இருப்பவர்கள். பொது சேவை மூலம் இறைவனை காணபார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers