41 வயதில் 20 வயது இளம்பெண்ணை போல இருக்கும் அழகிய தாய்: காரணம் இதுதானாம்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 41 வயது தாய், வயதானாலும் இளம்பெண் போல் தோற்றமளிப்பதற்கான ரகசியம் குறித்து கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த 41 வயதான பெலிண்டா நார்டன் என்பவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர் தன்னுடைய இளம் வயதில் இருந்ததை விட, தற்போது 41 வயதில் மிகவும் இளமையாக இருந்து வருகிறார்.

உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் பெலிண்டா, தன்னுடைய தளத்தில் உடலை பராமரிப்பது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதனை அவருடைய ரசிகர்களும் ஆவலாக கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, எப்பொழுதும் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் அதிகமாக பாதாம், சால்மன்(மீன்) மற்றும் அவுரிநெல்லிகள் ஆகியவற்றை சேர்த்து கொள்வது நல்லது.

அவை ஆன்டிஆக்சிடண்டுகளாலும், வைட்டமின்களாலும் நிரம்பியுள்ளன. வயதான தோற்றத்திற்கு எதிரான சக்திகள் இதில் அதிகம் நிறைந்திருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்த சிறிய பழங்களில் வைட்டமின் கே மற்றும் சி உள்ளது. மேலும் இரத்த தரத்தை மேம்படுத்தும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நம் இதய சுகாதாரம் அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது.

ஒரு வாரத்திற்கு 5 முறை கீரையும், வாரத்திற்கு இரண்டு முறை சால்மன் மற்றும் பாதாம் பருப்பு தினமும் சாப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பின்னர் உடற்பயிற்சி குறித்து கூறுகையில், நான் ஜாகிங் செய்வதை நிறுத்தி நீண்ட நாட்களாகிவிட்டது. லேசாக சில உடற்பயிற்சிகள் மட்டும் தான் செய்வேன். அதிகமாக ஓடுவது உடல் வடிவமைப்பை மாற்றிவிடும்.

மனஅழுத்தத்தை அதிகம் தவிர்க்க பாருங்கள்.மகள்கள் மற்றும் என்னுடைய தோழிகளுடன் அதிக நேரம் செலவிடுவேன். அது என்னுடைய மனஅழுத்தத்தை குறைத்துவிடும் என தெரிவித்துள்ளார்.


மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers