பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற மனநோயாளி: நடந்தது என்ன?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற நபர் மனம் நலம் பாதிக்கப்பட்டவர் என அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்தின் ஹவிக் நகரில் பிறந்தவர் ஜான் டேவிட்சன் (53) இவர் 24 ஆண்டுகள் பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்டில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்தார்.

பின்னர் கனடாவுக்கு குடிபெயர்ந்த ஜான், அப்பாட்ஸ்ஃபார்ட் நகரில் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் கார் திருட்டு வழக்கில் நபர் ஒருவரை ஜான் கைது செய்த போது அவரை குறித்த நபர் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.

ஜானை சுட்ட நபர் பெர்டினாண்ட் ஆர்க்மன் (65) என தெரியவந்துள்ள நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

பெர்டினாண்ட்டின் மனைவி சமீபத்தில் உயிரிழந்த காரணத்தால் அவரின் மனநலம் பாதித்துள்ளதாக அவரின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பெர்டினாண்டிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையில், ஜானின் இழப்புக்கு அப்பாட்ஸ்ஃபார்ட் பொலிஸ் துறை சார்பில் டுவிட்டரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஜானுக்கு மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

பணிமாறுதல் பெற்று கனடாவுக்கு சென்றாலும் எங்களுடன் அவர் எப்போதும் தொடர்பில் இருப்பார் என நார்தம்பர்லேண்டில் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும், ஜான் இழப்பு வேதனையளிக்கிறது, உண்மையான ஹீரோவை இழந்துவிட்டோம், அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்