இளகிய மனம் படைத்த என் மகனின் மரணத்துக்கு நிச்சயம் நீதி வேண்டும்: தந்தையின் ஆதங்கம்

Report Print Gokulan Gokulan in கனடா

கனடாவில் முதியவருக்கு உதவிய 19 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ஹமில்டன் பகுதியில் இரு இளைஞர்கள், வயதில் மூத்த நபரை தாக்கியுள்ளனர். இதனை கவனித்த 19 வயது இளைஞரான யோசிப்-அல்-ஹஸ்னாவி முதியவரை காப்பாற்றுவதற்காக இருவரையும் விளக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவரது தந்தை அல்-ஹஸ்னாவி அருகில் இருந்தும் அவரால் காப்பாற்ற முடியவில்லை.

இறந்த நபருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அல்-மோஸ்டபா மசூதியில் இரங்கற்கூட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்கள் பெரும் திரளாக கூடி அஞ்சலி செலுத்தினர்.

கொல்லப்பட்ட இளைஞர் மிகவும் நல்ல மனம் படைத்தவர், அவரது கொலைக்கு நிச்சயம் நியாயம் கிடைக்க வேண்டும் என அனைவரும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டத்தின் இறுதியாக பேசிய இறந்த நபரின் தந்தை அல்-ஹஸ்னாவி, ’இந்த கூட்டம் எங்கள் குடும்பத்துக்கு மிக ஆறுதலாக அமைந்தது. மிக இளகிய மனம் படைத்த என் மகனின் மரணத்துக்கு நிச்சயம் நீதி வேண்டும். எங்களுக்கு ஆதரவளித்து வருகை புரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி’ தெரிவித்துள்ளார்.

மேலும் இறந்த நபரின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்கும் விதமாக புதிய வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கிற்கு நன்கொடையாக வரும் பணத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வு மற்றும் இதர செலவுகள் அல்லாமல் மீறும் பணத்தை பல்கலைகழகத்துக்கு நிதியாக வழங்கப்படும் என அவரது தந்தை கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, இரண்டு நபர்களை கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.


மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers