மகன் திருமணத்தை காண உயிரை கையில் பிடித்திருந்த தந்தை: அடுத்து நிகழ்ந்த நெகிழ்ச்சி நிகழ்வு

Report Print Raju Raju in கனடா
257Shares
257Shares
lankasrimarket.com

கனடாவில் வசிக்கும் நபரின் தந்தைக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே மகன் திருமணத்தை பார்த்துள்ளார்.

வங்கதேசத்தை சேர்ந்த ரிபட் - சனா இருவரும் கனடாவில் வசித்து வரும் நிலையில் உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்கள்.

இந்த மாதத்தில் இருவரும் கோலாகலமாக திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்கள்.

ஆனால் இந்த சமயத்தில் துபாயில் வசித்து வரும் ரிபட்டின் தந்தை ஷஹடட் சவுத்ரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் Acute Respiratory Distress Syndrome என்னும் நோய் இருப்பது தெரியவந்தது.

சவுத்ரி மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறவேண்டி இருப்பதால் மகன் திருமணத்துக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ரிபட் நெகிழ்ச்சியான ஒரு முடிவை எடுத்தார்.

அதன்படி தனது காதலி சனாவுடன் சவுத்ரி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு ரிபட் சென்றார்.

அங்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் ரிபட் - சனா திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து தனது மகனையும், மருமகளையும் ஆனந்த கண்ணீருடன் சவுத்ரி வாழ்த்தினார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்