உடற்பயிற்சி நிலைய கட்டிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமெரா: பதறும் பெண்கள்!

Report Print Balamanuvelan in கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள உடற்பயிற்சி மையம் ஒன்றில் பெண்கள் தங்கள் உடல் நிறத்தை குறைக்க பயன்படுத்தும் படுக்கை ஒன்றில் கமெரா ஒன்று மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதால் பெண்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

நீங்கள் எப்போதாவது tanning bed என்னும் அந்த படுக்கையை பயன்படுத்தியிருந்தால் இந்த செய்தியின் தீவிரத்தன்மை புரியும். புரியாதவர்களுக்கு... ஆசிய நாடுகளில் வெள்ளையாக இருக்கிறார் என்று சொல்வோமே, அப்படி வெண்மையாக இருக்கும் மேற்கத்திய நாட்டுப்பெண்கள், தங்கள் உடலின் நிறத்தை சற்று கருமையாக்குவதற்காக, அதாவது ஓரளவுக்கு ஒரு ஆசியரைப்போல மாற்றுவதற்காக வெயிலில் உள்ளாடைகளுடன் அல்லது இடுப்பில் ஒரு துண்டுடன் படுத்துக்கொள்வதுண்டு.

கனடாவைப் பொருத்தவரையில் (பொதுவாக உலகத்தில் என்று கூட சொல்லலாம்) பெண்கள், முக்கியமாக இளம்பெண்கள், இப்போதெல்லாம் மற்றவர்கள் முன்பு, அதுவும் தங்களையே குறுகுறுவெனப் பார்க்கும் ஆண்கள் முன்பு, அரை நிர்வாணமாகவோ, அல்லது உள்ளாடைகளுடனோ வெயிலில் படுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

இன்னும் சிலர் வெயிலில் போனால் தோல் புற்றுநோய் வரும் என அஞ்சுகிறார்கள். அதற்கு பதிலாக உடற்பயிற்சி மையங்களில் tanning bed எனப்படும் கட்டிலில் படுத்துக்கொள்கிறார்கள்.

இந்த கட்டில்கள் புற ஊதா (ultraviolet) ஒளியால் ஒளியூட்டப்படும். புற ஊதாக்கதிர்கள்தான் தோல் புற்றுநோய்க்கு காரணம் என்ற செய்தி இன்னொருபுறம்...

ஆக,இந்த tanning bed எனப்படும் கட்டிலில் படுத்து பெண்கள் தங்கள் உடல் நிறத்தை குறைத்துக்கொள்ள, அதற்கும் ஆபத்து வந்திருக்கிறது இப்போது, கமெரா வடிவில்.

ஏற்கனவே அரை குறை ஆடையுடன் வெளியில் நடமாட விரும்பாத நிலையில், பெண்களின் அந்தரத்தை குளோசப்பில் பதிவு செய்யும் கமெரா கண்டுபிடிக்கப்பட்டால் என்ன ஆவது? கமெரா இருப்பது தெரியவந்ததும் உடனடியாக அது கனேடிய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த கமெரா, யாரோ ஒருவர் ஒளித்து வைத்துப்போன சாதாரண கமெரா அல்ல. அது விலையுயர்ந்த தரமான ஒரு கமெரா, மட்டுமல்ல, அது அந்த கட்டில் செய்யும்போதே அத்துடன் இணைக்கப்பட்டதுபோல, யாரோ நேரம் எடுத்து அதை கவனமாக பொருத்தியிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ள கனேடிய பொலிசார், Chilliwack என்னுமிடத்திலுள்ள Planet Fitness என்பதுதான் அந்த உடற்பயிற்சி மையம் என்பதையும் வெளியிட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், அந்த உடற்பயிற்சி மையத்திற்கு ரெகுலராக செல்லும் பெண்கள், இந்த விடயம் வெளியானதும் பதறிப்போயிருக்கிறார்கள்.

இதை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும், இது ஒரு பெரிய பிரச்சினை என்று கூறியுள்ள பெண் ஒருவர், யாரோ ஒருவர், பெண்கள் உடைமாற்றுவதையும் அந்த கட்டிலில் படுத்துக்கொள்வதையும் வீடியோக்களாக எடுத்து வைத்திருக்கிறார் என்பதை அறியும்போது பயமும் அருவருப்பும் ஏற்படுகிறது என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்