ரமழான் காலத்தில் பள்ளிவாசல்களை திறக்க வேண்டாம்! நிர்வாகங்களுக்கு வக்ப் சபை கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்ற நிலையில் ரமழான் காலத்தில் பள்ளிவாசல்களை திறக்க வேண்டாம் என்று பள்ளிவாசல்களின் நிர்வாகங்களுக்கு வக்ப் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகும் ரமழான் காலத்தில் பள்ளிவாசல்கள் பின்பற்ற வேண்டிய சிறப்பு ஒழுங்குகள் குறித்தும் வக்ப் சபை அறிவித்தல்களை விடுத்துள்ளது.

ஐவேளை தொழுகைகள், வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை மற்றும் தாரவாஹ் தொழுகை என்பவற்றை மேற்கொள்ள வேண்டாம். அத்துடன் இப்தார் நிகழ்ச்சிகள் மற்றும் கஞ்சி விநியோகம் என்பவற்றையும் மேற்கொள்ளக்கூடாது என்று வக்ப் சபை கேட்டுள்ளது.

இதேவேளை பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கட்டுப்பாட்டு ஒழுங்குகளை ஊக்கப்படுத்துமாறும் வக்ப் சபை கோரியுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்