அஸ்வின் இடத்தில் நானா? இந்திய இளம் வீரர் குல்தீப் யாதவ் ஓப்பன் டாக்

Report Print Raju Raju in கிரிக்கெட்
262Shares
262Shares
Seylon Bank Promotion

அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு மாற்றாக இருக்கக்கூடிய அளவு தனக்கும் சஹாலுக்கும் போதிய அனுபவம் இல்லை என இந்திய இளம் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

இந்தியா - அவுஸ்திரேலியாவுக்கு இடையில் நடைப்பெற்ற ஒருநாள் தொடரிலும், கடந்த மாதம் நடந்த இலங்கை - இந்தியா ஒருநாள் தொடரிலும் இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

அவர்களுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் யூசுவெந்திர சஹால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.

இருவரும் பிரமாதமாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சீனியர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2019-ல் நடக்கவுள்ள உலக கிண்ண போட்டிக்கான அணியில் குல்தீப் மற்றும் சஹால் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய குல்தீப் யாதவ், அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு மாற்றாக இருக்கக்கூடிய அளவு எனக்கும் சஹாலுக்கும் போதிய அனுபவம் இல்லை.

அவர்களுக்கு நாங்கள் மாற்று என்ற கேள்விக்கே இடமில்லை, காரணம், நாங்கள் மிகவும் இளையவர்கள்.

அஸ்வின் மற்றும் ஜடேஜா எல்லா விதமான போட்டிகளிலும் தங்கள் திறமையை நிரூபித்தவர்கள் ஆவார்கள்.

நான் இன்னும் அதிகமாக கிரிக்கெட் விளையாட வேண்டியுள்ளது, அதனால் இது போன்ற விடயங்கள் குறித்து நான் யோசிப்பதில்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்