இலங்கை அணி பயிற்சியாளரை புகழ்ந்து தள்ளிய வங்கதேச வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
379Shares
379Shares
ibctamil.com

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளரான சண்டிகா ஹத்ருசிங்கா ஒரு சிறந்த பயிற்சியாளர் என்று வங்கதேச அணியின் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் கூறியுள்ளார்.

இலங்கை அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ளவர் சண்டிகா ஹத்ருசிங்கா. இவரின் பயிற்சியால் இலங்கை அணி சாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வங்கதேச அணியின் துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அவர் குறித்து கூறுகையில், சண்டிகா ஒரு சிறப்பான பயிற்சியாளர். அவர் அளித்த பயிற்சியின் மூலம் வங்கதேசம் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடியது.

அவர் தலைமையில் தான் நாங்கள் எங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளை வீழ்த்தினோம்.

அதுமட்டுமின்றி 2015-ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் குவார்டர் பைனலுக்கு சென்றோம். 2017-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதி போட்டிக்கு சென்றோம்.

இது அனைத்துமே அவரையே சாரும், அவர் அளித்த பயிற்சியின் மூலம் தான் எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டது, ஒரு திறமையான பயிற்சியாளர், தற்போது அவர் இலங்கை அணிக்கு பயிற்சியாளராக உள்ளார், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

சண்டிகா ஹத்ருசிங்கா வங்கதேச அணிக்கு தலைமை பயிற்சியாளராக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்