இங்கிலாந்து அணிக்கு சந்தித்த 2-வது பந்திலே ஷாக் கொடுத்த ரிசப் பாண்ட்! புகழும் இந்திய துடுப்பாட்ட பயிற்சியாளர்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து வீரர்களுக்கு ஷாக் கொடுத்த ரிசப்பாண்டின் துடுப்பாட்டத்தைக் கண்டு, நானும் ஷாக் ஆகிவிட்டேன் என்று துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. இந்த் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் இளம் வீரர் ரிஷப் பாண்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இது தான் அவருடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகும்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின், முதலாவது இன்னிங்ஸில் கோஹ்லி ஆட்டமிழந்ததும் 6-வது விக்கெட்க்கு ரிஷப் பண்ட் களமிறங்கினார். ரிஷப் பண்ட் தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார்.

இங்கிலாந்து மண்ணில் கோஹ்லியே தடுமாறி வரும் போது, பாண்ட் அசால்ட்டாக தான் சந்தித்த இரண்டாவது பந்திலே சிக்ஸர் பறக்கவிட்டார்.

இது இங்கிலாந்து வீரர்களுக்கே சற்று ஷாக்கிங்காகத் தான் இருந்தது.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் சிக்ஸருடன் தனது டெஸ்ட் பயணத்தை துவங்கிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், 12-வது சர்வதேச வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

தனது டெஸ்ட் பயணத்தை சிக்ஸர் அடித்து துவங்கிய ரிஷப் பாண்டிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

இந்திய அணியின் தற்போதைய துடுப்பாட்ட பயிற்சியாளரான சஞ்சய் பங்கர், ரிஷப் பாண்டின் சிக்ஸரை பார்த்து நாங்களே ஷாக் ஆகிவிட்டோம், அவர் தன்னம்பிக்கை நிறைந்த கிரிக்கெட் வீரர்.

ரஞ்சி தொடர் உள்ளிட்ட பல உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்ததன் மூலமே ரிஷப் பண்ட் இந்த நிலையை அடைந்துள்ளார்.

ரிஷப் பண்ட் சிக்ஸர் அடித்து தனது பயணத்தை துவங்கிய அந்த நொடி முன்னாள் வீரர் விநோத் காம்ப்ளி எனது நினைவுக்கு வந்தார், அவரும் தனது முதல்தர கிரிக்கெட் பயணத்தை சிக்ஸர் அடித்து தான் துவங்கினார். ரிஷப் பாண்ட்டின் முன்னேற்றத்தை கண்டு நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்