அனல் பறக்கும் இரண்டாவது டெஸ்ட்: மோதலில் இறங்கிய அவுஸ்திரேலிய கேப்டன் பெய்ன்- கோஹ்லி வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி மற்றும் டிம்பெய்ன் மாற்றி மாற்றி கிண்டல் செய்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

முதல் போட்டியில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா அணி இப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அதன் படி அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 326 ஓட்டங்களும், இந்திய அணி 283 ஓட்டங்களும் எடுத்தது.

இதையடுத்து இரண்டாம் இன்னிங்ஸ் துவங்கிய அவுஸ்திரேலியா அணி சற்று முன் வரை 4 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து 200 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிசப் பாண்ட் அவுஸ்திரேலிய வீரர்களை ஸ்டம்ப்பிற்கு பின்னால் நின்று வெறுப்பேற்றி வந்தார்.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரை, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா வீசினார்.

அப்போது மூன்றாவது பந்தை அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெயின் எதிர்கொண்டார். அந்தப் பந்தில், இந்திய வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்தனர்.

ஆனால், நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். உடனடியாக இந்திய அணியின் தலைவர் கோஹ்லி மற்றும் அவுஸ்திரேலிய தலைவர் பெயின் ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்டது ஸ்டம்பில் இருக்கும் மைக்கில் பதிவானது.

முதலில் கோஹ்லி, இவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டால் தொடரை 2-0 என முன்னிலைபெற்றுவிடும் என்று தெரிவிக்க, பெயின் அதற்கு முதலில் நீங்கள் பேட் செய்ய வேண்டும் Big Head(பெரிய தல) என்றார்.

ஆனால் பெயின், மற்றொரு அணியின் தலைவரை Big Head என்று சொல்ல வாய்ப்பில்லை என அவுஸ்திரேலிய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில், ஹெட் என்னும் வார்த்தை தெளிவாகக் கேட்கிறது. ஆனால், அதற்கு முன்னர் சொன்ன வார்த்தை தெளிவாகக் கேட்கவில்லை. இதை வைத்து பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.

அதன் பின் மூன்றாம் நாள் முடிவுக்கு பின் கோஹ்லி-பெய்ன் ஏதோ பேசிக் கொண்டு வந்தனர். அது என்ன என்று அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனிடம் கேட்ட போது, இருவரும் இரவு டின்னருக்கு எங்கு போகலாம் என்று பேசிக் கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்