ஒரு தமிழக வீரரையாவது சேர்த்திருக்கலாம்.. சென்னை ரசிகர்கள் விரக்தி!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

12வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 70 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

நேற்று நடந்த போட்டியில் சென்னை அணியில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சொந்த மண்ணில் சென்னை அணி விளையாடுவதால் உள்ளூர் வீரர்கள் விளையாடுவதை காண காத்திருந்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னை அணியில் இடம்பிடித்துள்ள முரளி விஜய், ஜெகதீசன் ஆகிய இரு தமிழக வீரர்களில் ஒருவருக்கு விளையாட வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஒரு அணி சொந்த மண்ணில் விளையாடும்போது, அந்த ஊர் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தால் ரசிகர்களின் ஆதரவு பெருமளவு அந்த அணிக்கு கிடைக்கும். ஆனால், சென்னை அணியில் அந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers