டோனி டி20 உலகக்கோப்பையில் இருப்பாரா? பயிற்சியாளர் சொன்ன முக்கிய தகவல்

Report Print Kabilan in கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை வரை டோனி விளையாடுவார் என அவரது சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால், அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்காமல் இருந்து வந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். அத்துடன் இந்திய ராணுவத்தினருடன் 2 மாத காலம் தங்கியிருக்க போவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், தனது ஓய்வு முடிவை தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில், டி20 உலகக்கோப்பை வரை டோனி விளையாடுவார் என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Stu Forster/Getty Images

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டோனியிடம் இன்னும் கிரிக்கெட் திறமை இருக்கிறது. இது எனக்கு தெரியும். சர்வதேச போட்டியில் விளையாடக்கூடிய அளவுக்கு அவர் போதுமான உடல் தகுதியுடன் இருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை வரை டோனியால் விளையாட முடியும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers