ஆஷஸ் டெஸ்ட்: டேவிட் வார்னரை வெறுப்பேற்றிய இங்கிலாந்து ரசிகர்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்
142Shares

ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னரை, கடுப்பேற்றும் வகையில் இங்கிலாந்து ரசிகர்கள் நடந்து கொண்டனர்.

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் 284 ஓட்டங்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. முன்னதாக அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இங்கிலாந்து வீரர் பிராட்டின் பந்துவீச்சில் 2 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

அவர் பெவிலியனை நோக்கி செல்லும்போது, இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் அவரை கடுப்பேற்றும் விதமாக, உப்புத்தாளை வெகுநேரம் காண்பித்து வழி அனுப்பி வைத்தனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, அவுஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் உப்புத்தாளை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

எனவே, அதனை குறிக்கும் வகையில் இங்கிலாந்து ரசிகர்கள் இவ்வாறு நடந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்