இவர் தான் முதல் வீரர்.. விராட் கோஹ்லி படைத்த பிரம்மாண்ட சாதனை!

Report Print Kabilan in கிரிக்கெட்

10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ஓட்டங்களை தொட்ட முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணியுடனான ஒருநாள் தொடரில் விராட் கோஹ்லி 2 சதங்களை விளாசி மிரட்டினார்.

இதன்மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ஓட்டங்களுக்கும் மேல் குவித்துள்ளார். இவை டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வகை கிரிக்கெட்டையையும் சேர்த்த ஓட்டங்கள் ஆகும்.

இதற்கு முன்பு அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் தான் இந்த சாதனையை படைத்திருந்தார். அவர் 2000-2009 ஆண்டுகளில் 55 சதங்களுடன் 18,962 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் இருந்தார். ஆனால், விராட் கோஹ்லி 2010-2019 ஆண்டுகளில் 67 சதங்களுடன் 20,018 ஓட்டங்கள் குவித்து அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

மேலும் இந்தப் பட்டியலில், தென் ஆப்பிரிக்காவின் ஜேக் காலிஸ் (16,777) 3வது இடத்திலும், இலங்கையின் ஜெயவர்த்தனே (16,304) மற்றும் சங்ககாரா (15,999) ஆகியோர் 4வது மற்றும் 5வது இடத்திலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (15,962) 6வது இடத்திலும் உள்ளனர்.

இந்த சாதனையுடன் கோஹ்லி மற்றொரு சாதனையையும் செய்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த சச்சினின் சாதனையை (3 சதங்கள்) கோஹ்லி சமன் செய்துள்ளார். அத்துடன் அணித்தலைவராக ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர் (7 சதங்கள்) என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும் run chasing செய்தபோது அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையையும் (26 சதங்கள்) கோஹ்லி தன்னகத்தே வைத்துள்ளார். chasing செய்த, கோஹ்லி சதம் விளாசிய 22 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்